பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
06:07
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் ஐந்து. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை கடவுள் செய்கிறார். பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என சக்திகளை ஐந்தாகப் பிரிப்பர். சிவ மந்திரங்களில் சிறந்தது ’நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரம். சங்கு, சக்கரம், கதாயுதம், கத்தி, வில் என மகாவிஷ்ணுவின் ஆயுதங்கள் ஐந்து. விநாயகர், சூரியன், சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய ஐந்து தெய்வங்களை வழிபடுவதை ’பஞ்சாயதன பூஜை’ எனச் சொல்வர். ரத்தின சபை, பொற்சபை, ரஜத சபை, (ரஜதம்- – வெள்ளி), தாமிரசபை, சித்திரசபை என நடராஜருக்குரிய சபைகள் ஐந்து. சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என லிங்கத்தின் வகைகள் ஐந்தாகும். இப்படி கடவுளுக்கும், ஐந்துக்கும் உள்ள தொடர்பை காட்டும் விதத்தில், வழிபாட்டிற்குரிய திருவிளக்கில் ஐந்து முகங்கள் உள்ளன.