நரசிம்ம புராணத்தில் இடம் பெற்றுள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. அனுதினமும் இந்த ஸ்தோத்திரப் பாடலைப் பாடி நரசிம்மரை வழிபடுவதால், தீராத கடன் பிரச்னைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்.
பொருள்: லட்சுமிதேவியால் ஆலிங்கனம் செய்யப்பட்ட இடதுபாகத்தை உடையவரும், பக்தர்களுக்கு வரங்களைக் கொடுப்பவரும், மகா வீரருமான நரசிம்மரை, கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன். அவர் அருள்பாலிக்க வேண்டும்.