Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு ராமர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு ராமர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராமர்
  ஊர்: குத்துக்கல் வலசை
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ராம நவமி, அனுமன் ஜெயந்தி  
     
 தல சிறப்பு:
     
  சிறிய பிடிமானத்தின்மீது, ஓங்கி உயர்ந்து நிற்கும் தடிமனான உயர்ந்த, ஒற்றைப் பாறை, மோன நிலையிலிருப்பது பார்ப்பவர்களை சிலிர்க்க வைப்பதோடு ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ராமன் திருக்கோயில் குத்துக்கல் வலசை, திருநெல்வேலி மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
 

இங்கு கூப்பிய கரங்களோடு காணப்படும் ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பக்தர்கள் தங்களின் கோரிக்கையை மனதில் வைத்து, ஸ்ரீராம ஜெயம் என்று வெள்ளைச் சீட்டில் எழுதிய மாலையை அனுமனுக்குச் சாற்றி வழிபடுகிறார்கள். இதனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. வெள்ளி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.


 
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம் செய்தும், வடைமாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

இயற்கையிலேயே ராமரின் பாதம் பட்டதால் இந்த இளமலைப் பாறையின் பக்கம் சுனை ஒன்று உள்ளது. கோடையிலும் வற்றாத தண்ணீரையும் தித்திக்கும் தன்மையையும் கொண்ட சுனை அது. முந்தைய காலங்களில் மக்களின் வாழ்க்கைக்கும், குடிநீருக்கும் ஆதாரமாகவே இந்த சுனை இருந்திருக்கிறது. பெருமானின் அருளால் அந்தப் பகுதி பசுஞ்சோலையாய்க் காட்சி தருவதோடு, அதனை ஒட்டியுள்ள வயல்களில் நல்ல விளைச்சல் உள்ளது. தேங்காயை உடைத்துப் பிளந்ததைப் போன்று பிளவுபட்டு நிற்கும் இந்தப் பாறையை ஒட்டித்தான் ராமரின் ஆலய மூலஸ்தானம் அமையப் பெற்றுள்ளது. குன்றுகளைப்போல உள்ள இந்தப் பாறைகளில் ரிஷிகள் அடங்கியுள்ளார்கள். காசி, சிவகாசி, தென்காசி என வந்த ராமபிரான், கடைசியாக இங்கு வந்தபோதுதான் இந்த இளமலைப் பக்கம் வந்து அமர்ந்தார். அவரைத் தியானித்து ரிஷிகள் தவம் மேற்கொண்டார்கள். அதனை நினைவுறுத்துவதுதான் இந்தப் பாறைகள்.


அதோடு காவடி மடம் என்று ஒன்று இதனடியில் அமைந்திருக்கிறது. முந்தைய காலங்களில் ஊருக்குள் மக்களிடம் உணவு வாங்கி வரும் அன்னக்காவடிகள், இந்த மடத்தில்தான் வந்து தவம் செய்வது வழக்கம். ராமபிரான் பாதம்பட்ட இந்த மண்ணில் அவர்கள் தங்கும்போது, அவர்களின் உடல்நோயும் தீர்ந்து சுகப்பட்டிருக்கிறார்கள். அன்னக்காவடிகளைப் பின்பற்றியே அப்போதைய காலங்களில் உடல் நலமில்லாதவர்கள் இங்கே வந்து தங்கி குணமாகிச் சென்றிருக்கிறார்கள். ராமபிரானின் பாதம்பட்ட இந்த மண்ணின் தனிச்சிறப்பு அது. அடிப்பகுதி சரிந்து விடுமோ என்று மயிர்க்கூச்செறியும்படி, சிறிய பிடிமானத்தின்மீது, ஓங்கி உயர்ந்து நிற்கும் தடிமனான உயர்ந்த பாறை ஒன்று, ராமபிரானை நோக்கி காலம் காலமாய் நிற்கிறது. ஒற்றைக் காலில் கடும் தவம் மேற்கொள்பவரின் தன்மையை வெளிப்படுத்தும் அந்த ஒற்றைப் பாறை, ராமபிரானை நோக்கித் தவம் செய்வதைப் போன்று மோன நிலையிலிருப்பது பார்ப்பவர்களை சிலிர்க்க வைப்பதோடு ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தவநிலையில், குத்துக்கல்லைப் போன்று இந்தப் பெரும் பாறை நிற்பதால் தான் குத்துக்கல் வலசை என்ற பெயர் ஏற்பட்டது.


 
     
  தல வரலாறு:
     
  ராமபிரான் சீதாபிராட்டியாரோடு இங்கு வந்து தங்கினார். அதை நினைவூட்டும் வகையில் தனது வில், அம்புகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். அப்போது அவர் வந்தமர்ந்த பகுதி-வளமலைக் குன்றுகளாய் அமைந்திருந்தது. ராமபிரானோடு இலக்குமணனும் வந்ததால் எங்களது மூதாதையர் இலக்குமணனின் சிலையையும் சேர்த்து ஆலயம் அமைத்ததோடு... ராமர் வந்தமர்ந்த வளமலையின் பெயரும் நீடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாலயத்துக்கு வளமலை ராமபிரான் ஆலயம் என்ற சிறப்புப் பெயரையும் வைத்தார்கள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிறிய பிடிமானத்தின்மீது, ஓங்கி உயர்ந்து நிற்கும் தடிமனான உயர்ந்த, ஒற்றைப் பாறை, மோன நிலையிலிருப்பது பார்ப்பவர்களை சிலிர்க்க வைப்பதோடு ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.