Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திருவெண்காடர்
  அம்மன்/தாயார்: வாடாகலை நாயகி
  ஊர்: பாப்பான்குளம்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம்  
     
 தல சிறப்பு:
     
  கருவறை அருகிலுள்ள அர்த்த மண்டபத்திலிருந்து லிங்கத்தை வழிபட்டால் சிவலிங்கம் சிறியதாகவும், கொடிமரத்தின் அருகில் நின்று வழிபட்டால் பெரிய அளவிலும் தெரிகிறது. சந்திரகாந்த கல்லில் செய்யப்பட்ட அபூர்வ சிவலிங்கத்தை இங்கு தரிசிக்கலாம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில் பாப்பான்குளம், திருநெல்வேலி மாவட்டம்.  
   
போன்:
   
  +91 98949 62523  
    
 பொது தகவல்:
     
  வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிற்பம் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. கோல் தூண்கள், மணிமண்டபம், சிற்பங்கள் கலை நுணுக்கங்கள் சிறப்பு வாய்ந்தவையாகும்.  
     
 
பிரார்த்தனை
    
  எதிரி பயம் நீங்க இங்குள்ள சனீஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்பாளுக்கு திங்கள், வெள்ளி, பவுர்ணமியில் பால், தேன், சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர். 
    
 தலபெருமை:
     
 

கருவறை அருகிலுள்ள அர்த்த மண்டபத்திலிருந்து லிங்கத்தை வழிபட்டால் சிவலிங்கம் சிறியதாகவும், கொடிமரத்தின் அருகில் நின்று வழிபட்டால் பெரிய அளவிலும் தெரிகிறது. சந்திரகாந்த கல்லில் செய்யப்பட்ட அபூர்வ சிவலிங்கத்தை இங்கு தரிசிக்கலாம்.


மழைக்கு தாராஹோமம்: வெண்பனி உறைந்த கயிலையில் வாழும் ஈசன், இங்கும் வந்து அமர்ந்ததால் திருவெண்காடர் எனப்படுகிறார். மழை இல்லாத காலத்தில், இவருக்கு தாரா அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தால் உடனடியாக மழை வருகிறது. தாராஹோமம் செய்யும் போது கருடன் வட்டமிடுவது சிறப்பு.  சனீஸ்வரனின் சிற்பம் சிறப்பான முறையில் வடிக்கப்பட்டுள்ளது. இவரிடம் முறையிட்டால்,  எதிரி பயம் நீங்கும், என்கிறார்கள்.


அம்பாள் பெயர்க்காரணம்: இங்குள்ள அம்பாளை வாடாகலை என்கின்றனர். ஆயகலைகள் 64ம் அன்னையின் திருவடியில் அமர்ந்ததாலும், 32 லட்சணங்களுடன் சிலை வடிவமைக்கப்பட்டதாலும் இப்பெயர் பெற்றாள். அம்பாளுக்கு திங்கள், வெள்ளி, பவுர்ணமியில் பால், தேன், சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுகிறது. தற்போது கோயில் சிதிலமடைந்துள்ளது. அருள் நந்தி அடியார் பேரவையினர் இரண்டு கால பூஜை செய்கின்றனர். கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடக்கிறது.


 
     
  தல வரலாறு:
     
  சிவபக்தரான பாண்டிய மன்னர் ஆதித்தவர்மன், பல சிவாலயங்களை கட்டி வந்தார். அவர் கட்டிய கோயில்களை சதுர்வேதி என்ற சிற்பி வடிவமைத்தார். கலை நுணுக்கத்துடன் சிலை வடித்து மன்னரின் மனதில் இடம் பிடித்தார். அவருக்கு மன்னர், நிலம் தானமாக வழங்கினார். அந்தப்பகுதி சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. சிலகாலம் கழித்து, சதுர்வேதிக்கு, வாழ்வில் பல இடையூறுகள் ஏற்பட்டன. ஜோதிடம் பார்த்த போது, கிரகதோஷமே துன்பத்திற்கு காரணம் என்றனர். இதற்குப் பரிகாரமாக சந்திரகாந்தக் கல்லில் சிவலிங்கம், பரிவார தெய்வங்கள், நவக்கிரகங்கள் வடித்து ஒரு கோயில் கட்டும்படி கூறினர். இதை மன்னரிடம் சதுர்வேதி தெரிவித்தார். அவரது துணையுடன் தனக்கு தானமாக தரப்பட்ட நிலத்தில், கோயில் கட்டி குளம் வெட்டினார். இந்தக் குளம் கல்குறிச்சி குளம் எனப்படுகிறது. இதன்பிறகு அவருக்கு கஷ்டம் குறைந்தது.  சந்திரகாந்தக்கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை திருவெண்காடர் என்கின்றனர். அம்பாளின் திருநாமம் வாடாகலை நாயகி. தாமிரபரணியின் வளமையால் இப்பகுதியில் பலவித பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததால் இப்பகுதி முதலில் பாப்பாங்கு என்று பெயர் பெற்றது. பாப்பாங்கு என்றால் பறவைக்குஞ்சு. இப்பெயரே காலப்போக்கில் மருவி பாப்பான்குளம் ஆகிவிட்டது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருவறை அருகிலுள்ள அர்த்த மண்டபத்திலிருந்து லிங்கத்தை வழிபட்டால் சிவலிங்கம் சிறியதாகவும், கொடிமரத்தின் அருகில் நின்று வழிபட்டால் பெரிய அளவிலும் தெரிகிறது. சந்திரகாந்த கல்லில் செய்யப்பட்ட அபூர்வ சிவலிங்கத்தை இங்கு தரிசிக்கலாம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.