Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அஷ்ட புஜ பத்ரகாளியம்மன்
  அம்மன்/தாயார்: அஷ்ட புஜ பத்ரகாளியம்மன்
  தல விருட்சம்: அரசு, வேம்பு
  தீர்த்தம்: அரசல்மாநதி தீர்த்தம்
  ஊர்: பூந்தோட்டம்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி மாதம் ஏழுநாட்கள் உற்சவம், கார்த்திகையில் பைரவர் யாக பெருவிழா, ஆடியில் குத்து விளக்கு பூஜை, தை மாதம் ஏகதின லட்சார்ச்சனை, மாதம்தோறும் பவுர்னமி பூஜை அன்னதானம் மற்றும் தேய்பிறையில் கால பைரவர்க்கு சிறப்பு ஹோமம்.  
     
 தல சிறப்பு:
     
  ஒரு கலசத்துடன் தனி சன்னதியில் ,பைரவர் 64 அவதாரத்தில் காலபைரவராக கிழக்குப் பார்த்த வண்ணம் அருள்பாலிப்பது சிறப்பு. உள் மண்டபத்தில் மாப்பிள்ளை வீரசாமி கிழக்குப் பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு அஷ்ட புஜ பத்ரகாளியம்மன் சமேத மாப்பிள்ளை வீராசாமி திருக்கோயில் மயிலாடுதுறை சாலை, பூந்தோட்டம், நன்னிலம் தாலுகா, திருவாரூர்- 609503.  
   
போன்:
   
  +91 9750305766 
    
 பொது தகவல்:
     
  அரசலாற்றின் இடது பக்க கரையில் நுழைவு வாயில் மேற்கு பக்கம் பார்த்த வண்ணம் கோயில் அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் 500 பேர் அமந்து தரிசனம் செய்யும் வகையில் இடம் உள்ளது.  மகாமண்டபத்தில் வடக்கு பக்கம் மகா கணபதி, பெத்தாரணசுவாமி அருள்பாலிக்கிறார்கள்.  வடக்குப்பார்த்த அம்மன், கிழக்குப் பார்த்த கால பைரவரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். எதிரில் நாகரும் தலை விருட்சமும் உள்ளது, ஆறு அடி உயர குதிரையை பிடித்த வண்ணம் பாதுகாவலரும் அவர் அருகில் பைரவர் நாய் மேற்கு பக்கம் பார்த்த வகையில் அமர்ந்திருப்பது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கடன் பிரச்சனை நீங்கவும், கொடுத்த பாக்கி வசூலாவதற்கும், போட்டியில் பங்கேற்க வீரம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து பொங்கலிடுகிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் பூசனி அல்லது தேங்காயில் விளக்கேற்றுகிறார்கள். மாப்பிள்ளை வீரச்சாமிக்கும், அம்மனுக்கும் திருமண அலங்காரம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  பழங்காலத்தில் அதிகளவில் வனங்கள் இருந்துள்ளது. இங்கிருந்து மலர்களை கொய்து இறைவனுக்கு அனுப்பி வைத்ததால் பின்னாளில் பூதோட்டம் என்றாகி பூந்தோட்டம் என மறுவியுள்ளது. சன்னதியில் குரு, சொர்னம் மற்றும் காலபைரவர் என நான்கு அவதாரமாக   அமைந்துள்ளது. மொத்தத்தில் ஏழு கலசம் கோயிலில் இடம் பெற்றுள்ளது. கடந்த 2012ல் புது கட்டங்கள் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள அம்மன், அஷ்ட(எட்டு) கரங்கள் உள்ளன. இரு கைகளில் சூலம், ஒரு கையில் அம்மனை எதிர்த்து போராடியவர் தலை, காலிலும் ஒருவரை மிதித்துள்ளார். ஒரு கையில் தீச்சட்டி, ஒரு கையில் சூலம், ஒரு கையில் கத்தி, ஒரு கையில் பூத் தட்டு, ஒருகையில் குங்குமத்தட்டு அவருக்கும் பின் பக்கத்தில் பாலகர்கள் மாலையுடன்  நிற்கின்றனர். காதில்தோடு, கழுத்தில் தாலி, பச்சைப்பட்டு,நீலகிரீடம், மூக்கில் மூக்குத்தியுடன் பிளாக்கு, காலில் சலங்கையுடன் காட்சிதரும் அம்மனைநேரில்பார்ப்பது போன்று உள்ளது.

மாப்பிள்ளை வீரசாமி,  அமர்ந்த நிலையில் வலது கையில் கத்தி, இடது கையில் சுக்குமாந்தடியும், காலில் வெண்டையமும், ஆபரணங்களுடன், தலையில் பரிவட்டம், வீரத்துடன், சிரித்த முகத்துடன்  காட்சி தருகிறார். காவலர்கள் இருவர் சற்று முன்னோக்கி நிற்கின்றனர். பூதகணங்கள் பின்புறமும் இரு பக்கமும் பைரவர்கள் நாய் அவதாரத்தில் அமர்ந்துள்ளனர். பெத்தாரணசுவாமி, நின்ற நிலையில் பரிவட்டத்துடன், கையில் கத்தியும், மறு கையில் சுக்குமாந்தடியுடன் ஆபரணங்களுடன் நெற்றியில் வைணவ மரபில் நாமம் இட்டுள்ளார்.
 
     
  தல வரலாறு:
     
  கடந்த 300 ஆண்டுகள் முற்பட்டது.  இப்பகுதியில் அம்மன் முதலில் பிரதிஷ்ட்டை செய்து பாதுகாத்து பராமித்துள்ளனர். இப்பகுதியில் வயல் சூழ்ந்தப்பகுதியானதால் இரவு நேரத்தில் திருட்டு நடந்துள்ளது. அதனால் காவல்தெய்வமாக மாப்பிள்ளை சாமியும், பெத்தனாத சுவாமியும் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் செல்வ வளங்கள் நிறைந்துள்ளது. சில காலம் பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்துள்ளது. அப்பகுதியினர் தனித்தனி சன்னதியுடன் கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தினர். அதன் பின் நுழைவு வாயிலில் மாப்பிள்ளைசாமிக்கு மூன்று கலச கோபுரம், விநாயகர், கால பைரவர், அம்மன், பெத்தனாதசாமி கோயில்களுக்கு தனித்தனி கலசம் அமைக்கப்பட்டுள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஒரு கலசத்துடன் தனி சன்னதியில் ,பைரவர் 64 அவதாரத்தில் காலபைரவராக கிழக்குப் பார்த்த வண்ணம் அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.