Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு காளிகாபரமேஸ்வரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காளிகாபரமேஸ்வரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காளிகாபரமேஸ்வரி
  உற்சவர்: காளிகாபரமேஸ்வரி
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: திருக்குளம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: குருடர்சேரி
  ஊர்: கொரடாச்சேரி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை திருவிழா, சாரதா நவராத்திரி விழா 16 நாள் உற்சவம் (புரட்டாசி அமாவாசை முதல் பவுர்ணமி வரை) விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  மகா மண்டபத்தில் அஷ்ட லட்சுமிகள் தனலட்சுமி, தானிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, ஆதிலட்சுமி, வீரலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, விஜயலட்சுமி சிற்பம் கலை நுணக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 7 .00 மணிவரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காளிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், கொரடாச்சேரி அஞ்சல், குடவாசல் தாலுகா, கொரடாச்சேரி பிள்ளைத்தெரு, திருவாரூர் -613703.  
   
போன்:
   
  +91 94434-75587 
    
 பொது தகவல்:
     
  பஞ்சநாதீஸ்வரர் பெயராலும், பஞ்சலோங்களை கொண்டு, பஞ்சபூதங்கள், ஐம்புலங்கன்களை அடக்கி சிவனை வழிபட் டதால், பஞ்சாட்சரபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பார்வையற்றவர்கள் சிலர் இங்கு வழிபாடு நடத்தியதால் குருடர்சேரி என்றாகி பின்னர் கொரடாச்சேரி என மருவியதாக கூறப்படுகிறது. வடக்குப்பக்கம் வாயிலில் கற்பகிரகத்தில் ஒரு கலசம் அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் 500 பேர் அமர்ந்து தரிசனம் செய்யலாம், மகா மண்டபத்தில் அஷ்ட லட்சுமிகள் தனலட்சுமி, தானிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, ஆதிலட்சுமி, வீரலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, விஜயலட்சுமி சிற்பம் கலை நுணக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

நுழைவு வாயிலில் வலது பக்கம் விநாயகர், சுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனித்தனி சன்னிதியிலும், ராகவேந்திரர், இடப்பக்கம் ஐயப்பனும் அருள்பாலிக்கின்றனர். வெளிப் பகுதியில் வயலில் கண்டெடுக்கப்பட்ட லிங்கம், மற்றும் சப்த கண்ணிகள், நாகர் தல விருட்ச மரத்தின் கீழ் அருள்பாலிப்பதுடன், மூலவர் சன்னிதியின் நான்கு பக்கம் கூடிய சுவற்றில் துர்க்கை, காமாட்சி, வைஷ்ணவி, தாட்சாயினி மற்றும் விநாயகர் அருள்பாலிக்கின்றனர். கோயில் பின் பக்கம் கிழக்குப் பக்கம் பார்த்த வகையில் ஆஞ்சநேயர் துளசி மாடத்தின் எதிரிலும், கருமாரியம்மன் கிழக்குப்பக்கம் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். கோயில் சிறு கலசங்கள் உட்பட ஆறு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 500 ஆண்களுக்கும் மேற்பட்டது. 2013 செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, புத்திரபாக்கியம், நினைத்த காரியம் கைகூடும் பரிகார ஸ்தலமாக உள்ளதால் பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பால்குடம் எடுப்பது, பால் அபிஷேகம், வயிற்றில் மாவிளக்கு ஏந்தல், பாவாடை மற்றும் தொட்டில் கட்டுதல், ஷெடல் காவடி எடுத்தல் போன்றவை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சோழர் காலத்திற்கு முன் மாரியம்மன் குல தெய்வ வழிபாடு நடந்துள்ளது. அப்போது அம்மை போட்டவர்களுக்கு இந்த கோயிலில் வழிபாடு நடத்தி தண்ணீர் கொடுத்தால் அம்மை குணமடையும் என்பதால் அங்கிருந்து வேப்பிலை மற்றும் தண்ணீர் கொடுத்தனுப்பவது வழக்கமாக இருந் துள்ளது.  
     
  தல வரலாறு:
     
  அப்பகுதி செல்வந்தர் முயற்சியால் கோயில் உருவாகியது. கல்லுளி மன்னன் வட நாட்டிற்கு போர் தொடுக்க செல்லும் போது வழிபட்ட கல்லுளி மாரியம்மன் கோயிலுக்கும் வடக்கில் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்தக்கோயில். மூன்றுபக்கம் நீரோட்டம் உள்ள பகுதியில் கோயில் கொண்ட காளிகாம்பாள் அப்பகுதி செல்வந்தர் கனவில் தோன்றி காவல் தெய்வமான நான் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் வருகிறேன்.

எனக்கு கோயில் கட்டி வழிபட்டால் அப்பகுதி மக்கள் நலன் காக்கும் காவல்தெய்வமாக விளங்குவதாக தெரிவித்துள்ளார். அதன் பின் சிறு கொட்டகை அமைத்துள்ளார். பிள்ளை வம்சத்தினர்கள் குலதெய்வமாக கருதி வழிபாடு நடத்தினர். அதன் பின் அந்த வம்சத்தினர்கள் சேர்ந்து கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி கிராம கோயிலாக பராமரித்து வருகின்றனர். பல்வேறுப்பகுதியில் இருந்து குலதெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மகா மண்டபத்தில் அஷ்ட லட்சுமிகள் தனலட்சுமி, தானிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, ஆதிலட்சுமி, வீரலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, விஜயலட்சுமி சிற்பம் கலை நுணக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.