Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பெரியாண்டவர்
  அம்மன்/தாயார்: அங்காளபரமேஸ்வரி
  தீர்த்தம்: சித்தாமிர்த குளம்
  ஊர்: திருநிலை
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்தரி  
     
 தல சிறப்பு:
     
  இங்கு விநாயகர், நந்தி, மனித உருவிலும், 21 சிவகணங்கள் லிங்க வடிவிலும் இருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை மணி 5 முதல் மணி 8 வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில் திருக்கழுக்குன்றம் திருநிலை கிராமம் காஞ்சிபுரம் மாவட்டம்.  
   
 
பிரார்த்தனை
    
  இவ்வாலயத்தின் அருகிலுள்ள சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு, சிவபெருமானையும் அம்மனையும் தொடர்ந்து ஆறு வாரங்கள் வணங்கி வந்தால் நடக்காத காரியங்களும் நடைபெறும் என்கின்றனர். மகப்பேறு கிட்ட பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. பல்லாயிரம் பேர் இந்த சிவனை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். அவர்கள் 21 மண் உருண்டைகளை சிவலிங்கத்தைச் சுற்றி வைத்து வணங்கிச் செல்கின்றனர். அனைவரின் வேண்டுதல்களையும் நிறைவேற்றும் தெய்வங்களாக விளங்குகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சிவபெருமான் மனித வடிவில் உலகை வலம் வந்தபோது, அவருடன் 21 சிவகணங்களும் எவர் கண்ணிலும் படாமல் மறைந்து சென்றன. அங்காள பரமேஸ்வரி சூலாயுதத்தை எறிந்தபோது, மண்ணில் மறைந்திருந்த சிவகணங்கள் மண்கட்டிகளாக தெறித்து விழுந்தன. பின்னர் ஈசன் சுயவடிவை அடைந்ததும் அவையும் சிவகணங்களாக வெளிப்பட்டன. இதைக் குறிக்கும் வண்ணம் இங்கே 21 சிவகணங்களும் லிங்க வடிவில் உள்ளன. சிவனுடன் நந்தியும் மனித வடிவில் சென்றது. எனவே இங்குள்ள நந்தி மனித உடலுடன் காணப்படுகிறது. இங்குள்ள விநாயகரும் இரண்டு கரங்களோடு மனித உடலுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருநீறு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தத் திருநீற்றைப் பூசி, உட்கொள்வதால், நோய் நீங்குவதாகவும்; கல்வி, செல்வம் கிட்டுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். பல சித்தர்களும் முனிவர்களும் கண்ணுக்குப் புலப்படாமல் இந்த சிவபெருமானை வணங்கிச் செல்கின்றனராம். லிங்க வடிவில் உள்ள 21 சிவகணங்கள் மூலவரான பெரியாண்டவரை தினமும் பூஜிப்பதாக ஐதீகம் உள்ளது. சிவபெருமான் மனித வடிவில் வந்ததால் அவர் காலடிகள் நேரடியாகப்பட்ட தலம் இது.  
     
  தல வரலாறு:
     
  அசுரர்கள் தங்கள் தவ பலத்தால் பல்வேறு வரங்களைப் பெற்று, பின்னர் அனைவருக்கும் இன்னல்கள் விளைவிப்பது தொடர்கதையாகி வந்த நிலையில், அத்தகைய அரக்கர் கூட்டத்தை அழிக்க வேண்டிய சூழல் ஈசனுக்கு வந்தது. அரக்கர்களின் வரத்தின் காரணமாக, ஈசன் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் வாழ்ந்தால்தான் அவர்களை அழிக்க முடியும் என்னும் நிலை இருந்தது. இறைவனின் திருவிளையாடலின்படி, பார்வதி தேவி எம்பெருமான்மேல் கோபம் கொண்டு, ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் பிறப்பீர்கள்! என்று ஈசனை சபித்தாள். அதன் காரணமாக சிவபெருமான் மனிதனாகப் பிறந்து தன்நிலை மறந்து பூமியில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். இதனால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன. தேவர்கள் மனம் கலங்கினர். அவர்கள் அனைவரும் பார்வதி தேவியிடம் சென்று, ஈசனை ஆட்கொண்டு உலகை உய்விக்க வேண்டும் என்று வணங்கி நின்றனர். அதையேற்ற பார்வதி தேவி அங்காள பரமேஸ்வரியாக பூவுலகம் வந்து, மனம்போன போக்கில் அலைந்து கொண்டிருந்த சிவனைக் கண்டு மனம் வருந்தி, தன் சூலாயுதத்தை ஓரிடத்தில் வீசியெறிந்தாள். பூமியில் பதிந்த அந்த சூலாயுதத்திலிருந்து ஒளி தோன்ற, அங்கே சிவபெருமான் வந்து தன் பாதங்களை ஒரு நிலையாய்ப் பதித்து திருநிலையாய் நிற்க, அவரை பரமேஸ்வரி வணங்கினாள். அப்போது ஒரு நாழிகைப் பொழுது நிறைவுற, சிவபெருமான் மனித உருவம் நீங்கி தன்நிலை அடைந்தார். பெரிய மனிதராய் உலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிர் பெரியாண்டவர் என்னும் பெயரில் வழங்கப் பெறுவீர்கள் என்று உமாதேவி கூற, தேவர்கள் அனைவரும் பெரியாண்டவரே என்று சொல்லி ஈசனின் பாதங்களைப் பணிந்தனர். அங்கேயே சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். இத்தகைய நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் திருநிலை.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு விநாயகர், நந்தி, மனித உருவிலும், 21 சிவகணங்கள் லிங்க வடிவிலும் இருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar