ஆடி மாதம், சிவராத்திரி, பவுர்ணமி, சித்திரை விழா மற்றும் வைகாசியில் கஞ்சி வார்த்தல்
தல சிறப்பு:
இங்குள்ள அம்மன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில்
நடப்பூர் மற்றும் அஞ்சல்,
கங்களாஞ்சேரி வழி, திருவாரூர்-610101.
போன்:
+91 9786141303
பொது தகவல்:
இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. பொம்மியம்மாள் மற்றும் வெள்ளையம்மாளுடன் மதுரை வீரன், வலம்புரி விநாயகர், பெரியநாயகி அம்மன், சப்தகன்னியர்கள், ஆதி மூல ஐயனார் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் விநாயகர், முருகன், பூரணை புஷ்பகலாவுடன் ஐயனார், பலிபீடம் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
பிரார்த்தனை
திருமணதடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தீராத நோய் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
மூலவருக்கு அபிஷேகம் செய்து பொங்கலிட்டும், உயிருடன் கோழி, ஆடு செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
சோழர் காலத்தில் கோயில்கள் கட்டும்போது எல்லை தெய்வமாக அமைந்துள்ளது. பலருக்கும் குல தெய்வமாக விளங்குகிறது.
தல வரலாறு:
முற்காலத்தில் வயல்வெளிகளில் திருட்டு அதிகமானதால் அப்பகுதியினர் காவல்தெய்வாக வழிபட்டனர். பிற்காலத்தில் பலருக்கு குலதெய்வமாக விளங்கியது. முதலில் கீற்றுக் கொட்டகையில் இருந்தது தற்போது புதிதாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள அம்மன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் இறங்கி நாகூர் சாலையில் சென்று, கல்யாண இருப்பு என்ற கிராமத்தில் இருந்து தெற்கே 2 கி.மீ.,தொலைவில் கோயில் உள்ளது. திருவாரூரில் இருந்து 13 கி.மீ.,
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி,சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020