பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி போன்ற விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 21, 22 மற்றும் 23 தேதிகளில் காலை 6 மணயில் இருந்து 6.15 மணி வரை சிவன் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.
இத்திருக்கோயில் மூலவர் மற்றும் அம்பாள் ஒரு கலசத்துடன் கூடிய தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சண்டிகேஸ்வரர், விநாயகர் மற்றும் பாலமுருகன் அருள்பாலிக்கின்றனர். நீண்ட காலமாக முட்புதற்கள் மண்டி கிடந்த சிவனுக்கு கோயில் கட்டியது 2013 ம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பிரார்த்தனை
நாகதோஷத்திற்கு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குவதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.
தலபெருமை:
இத்திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது. சோழர்கள் கட்டிய 108 கோயில்களில் இதுவும் ஒன்று.முதன் முதலில் சிவன் ஆன்மாக்களுக்காக நெற்பயிரை வளர்த்து உலகத்தோர்க்கு உவந்து அளித்த இடம் என்பதால் இப்பகுதிக்கு ஊட்டியாணி எனப்பெயர் வந்துள்ளது. ஈசன் பக்கதர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களை வழங்கி, இன்னல்களை போக்கி நல்வாழ்வு வாழ அருள்பாலிகிறார்.
தல வரலாறு:
சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இக் கோயில் புதையுண்டு முட்புதற்கள் மண்டி இருந்தது. கோயில் இருந்த இடம் தெரியாமல் இருந்தது. தற்போது கோயில் உள்ள இடத்தில் செங்கல் சூளை போட்டு வந்தனர். அப்போது தோண்டிய நிலையில் கிடைத்த விக்கரங்களை மெத்தனப் போக்காக போட்டுள்ளனர். சில தினங்களில் அப்பகுதியைச் சேர்ந்த மாறன் என்பவர் கனவில் தோன்றி ய ஈசன் தனக்கு கோயில் அமைக்க தெரிவித்ததின் பேரில் விழாக்குழு அமைத்து கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 2013 ஜூன் மாதம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 21, 22 மற்றும் 23 தேதிகளில் காலை 6 மணயில் இருந்து 6.15 மணி வரை சிவன் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பு.
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து மன்னார்குடி சாலையில் லட்சுமாங்குடியில் இறங்கி உள்ளே 8 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது. திருவாரூரில் இருந்து 25 கி.மீ.,தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்,மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி,சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
1. ஹோட்டல் செல்வீஸ், புதிய பஸ் நிலையம் அருகில், போன்:04366320625 கட்டணம்:ரூ.450 முதல் வி.ஐ.பி.சூட் ரூ.1750 வரை ஏ.சி. மற்றும் நான் ஏ.சி வசதி
2. ஹோட்டல் கிரின்ராயல் புதிய பஸ் நிலையம் எதிரில் போன் 04366221114,221115 கட்டணம் வரி உட்பட ரூ.999 முதல் வி.ஐ.பி.சூட் 1799 வரை அனைத்தும் ஏ.சி.
3.லாட்ஜ் பிரசிடென்சி புதிய பஸ் நிலையம் எதிரில் போன்உ04366222538 கட்டணம் ரூ.400 முதல் ரூ.1600 வரை ஏ.சி., நான் ஏசி வசதிகள்
4.மீனாட்சி லாட்ஜ், பழைய திருத்துறைப்பூண்டி ரோடு, கீழ்ப்பாலம் அருகில், கட்டணம் ரு.300 முதல் ஏ.சி., ரூம் தனிக்கட்டணம், செல்:04366 222279