கிழக்குப்பக்கம் முகப்பு வாயிலில் விநாயகர், முருகன் மூலவர் கிழக்குப் பக்கம் பார்த்தும், வெளிப்பிராகாரத்தில் தனி விமானத்துடன் நவக்கிரக மூர்த்திகளும், கால பைரவர் தெற்கு பக்கம் பார்த்தும், பெரியநாயகியம்மன் தெற்கு பக்கம் பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். மேலும் மகாம மண்டபத்தில் 200 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வகையில் இடம் உள்ளது. மேலும் பின் பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக ஆயத்த பணிகள் துவங்கியுள்ளது. மொத்தத்தில் நான்கு கலசம் கோயிலில் இடம் பெற்றுள்ளது.
பிரார்த்தனை
கடன் தீரவும், சகல ஐஸ்வர்ங்கள் கிடைக்கவும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னாபிஷேகத்தில் பங்கேற்பதும், அம்மனுக்கு திருவிளக்கு பூஜையில் பங்கேற்பது நலம் என கூறப்படுகிறது.
தலபெருமை:
சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவத்தலங்கள் 108- ல் இதுவும் ஒன்று. அப்போது ஓதுவார் உள்ளிட்டவர்களை இங்கு குடியமர்த்தி சுற்றுப்பகுதி கோயில் அர்ச்சகர்களுக்கு 1890- ம் ஆண்டில் வேத பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதுடன், இத்தலத்தை மையப்படுத்தி நான்கு திசைகளிலும் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு:
சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவத்தலங்கள் 108- ல் இதுவும் ஒன்று அப்போது ஓதுவார் உள்ளிட்டவர்களை இங்கு குடியமர்த்தி சுற்றுப்பகுதி கோயில் அர்ச்சகர்களுக்கு 1890- ம் ஆண்டில் வேத பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதுடன், இத்தலத்தை மையப்படுத்தி நான்கு திசைகளிலும் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். காலப்போக்கில் கோயில் பராமரிப்பில்லாமல் இடிந்து சேதமடைந் துள்ளது. முத்தையா குருக்கள் குடும்பத்தினர்கள் பராமரித்து செல்வந்தர்கள் மூலம் நிதி பெற்று கோயிலை கட்டி முடித்து இக்கோயிலுக்கு பல்வேறுப்பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவத்தலங்கள் 108- ல் இதுவும் ஒன்று என்பது சிறப்புமிக்கதாகும்.