காவிரி தீர்த்தம் (வயல் சூழ்ந்து ஊருக்கு நுழையும் வழியில்)
புராண பெயர்
:
கமலம் என்றால் தாமரை இப்பகுதியில் உள்ள குளத்தில் தாமரை மலரை விளைவித்து தியாராஜர் கோயிலில் உள்ள கமலாம்பாள் கோயிலுக்கு அனுப்பியதால் அப்பகுதி கமலாபுரம் என மறுவியுள்ளது.
வைகாசி விசாகம் மற்றும் குலதெய்வ வழிபாடு பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
குலதெய்வ வழிபாடு மற்றும் ஊர் காவல் தெய்வமாகவும், நோய்தாக்கத்திற்கும் பிரார்த்தனை செய்கின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 3.00 மணிமுதல் இரவு 6.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாணிக்க ஐயனார் திருக்கோயில்,
கமலாபுரம் மற்றும் அஞ்சல்,
குடவாசல் தாலுகா,
திருவாரூர்.610102.
போன்:
+91 73738 08084
பொது தகவல்:
கிராமத்திற்கு செல்லும் வழியில் வயல் சூழ்ந்தப் பகுதியில் குளத்திற்கும் மேல் பகுதியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் சன்னிதியில் ஒரு கலசம் அமைத்து முகப்பில் தகர ஷெட் அமைத்துள்ளனர். பக்தர்கள் மற்றும் பிரார்த்தனையாளர்கள் ஐயனை தரிசிக்கின்றனர். கிழக்குப்பக்கம் வாயில் எதிரில் முன்னடியன்கள் குதிரையை பிடித்த வண்ணம் நிற்கின்றனர். அருகில் பைரவர் நாய் அவதாரத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது. சற்று உள்ளே சென்றால் தனி சன்னிதியில் மதுரை வீரனாரும், அருகில் நொண்டி வீரரும் கையில் கத்தியை ஏந்தியவாறு அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
குலதெய்வ வழிபாடு மற்றும் ஊர் காவல் தெய்வமாகவும், நோய்தாக்கத்திற்கும், காணாமல் போன பொருள் கிடைக்கவும், திருஷ்டி ஓமல், விவசாயம் செழிக்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியவர்கள், புதிய தானிங்களை வைத்து சிறப்பு படையல் செய்வதுடன், குலதெய்வ வழிபாடு நடத்துபவர்கள் அவர்கள் விருப்பத் திற்கு ஏற்ப செய்யலாம். மொட்டை அடித்து வீரனுக்குரிய பொருட்களை வைத்து படையல் செய்வது, ஆடு, கோழிகளை உயிருடன் விடுதல் நேர்த்திக்கடனாக செலுத்துக்கின்றனர்.
தல வரலாறு:
இப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பர் வயலில் விவசாய அறுவடைக்குப் பின் தானியங்களை காவல் பார்த்தார். அந்த நேரத்தில் திருடர்கள் களவாட வந்து அவரை தாக்க முற்பட்ட போது குல தெய்வமான ஐயனாரை கத்தி அழைத்தார். அப்போது சுவாமி தோன்றி அவரை காத்துள்ளார். பின்னாளில் வந்த அவரது சந்ததியினர்கள் மாணிக்கத்தை காத்த ஐயனார் என அழைத்தனர். அதுவே மறுவி மாணிக்க ஐயனார் ஆனது. 300 ஆண்டுகள் பழமையானது. கடந்த 2009 ம் ஆண்டு புதிய கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:குலதெய்வ வழிபாடு மற்றும் ஊர் காவல் தெய்வமாகவும், நோய்தாக்கத்திற்கும் பிரார்த்தனை செய்கின்றனர்.
இருப்பிடம் : திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 10 கி.மீ. துõரத்தில் உள்ள கமலாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கண்கொடுத்த வனிதம் சாலையில் ஒரு கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி, சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
1. ஹோட்டல் செல்வீஸ், புதிய பஸ் நிலையம் அருகில், போன்:04366-320625 கட்டணம்:ரூ.450 முதல் வி.ஐ.பி.சூட் ரூ.1750 வரை ஏ.சி. மற்றும் நான் ஏ.சி வசதி
2. ஹோட்டல் கிரின்ராயல் புதிய பஸ் நிலையம் எதிரில் போன் 04366-221114,221115 கட்டணம் வரி உட்பட ரூ.999 முதல் வி.ஐ.பி.சூட் 1799 வரை அனைத்தும் ஏ.சி.
3.லாட்ஜ் பிரசிடென்சி புதிய பஸ் நிலையம் எதிரில் போன்உ04366-222538 கட்டணம் ரூ.400 முதல் ரூ.1600 வரை ஏ.சி., நான் ஏசி வசதிகள்
4.மீனாட்சி லாட்ஜ், பழைய திருத்துறைப்பூண்டி ரோடு, கீழ்ப்பாலம் அருகில், கட்டணம் ரு.200 முதல் ஏ.சி., ரூம் தனிக்கட்டணம், செல்:04366- 222279.