தேவர்கள் இருப்பதை முனிவர்கள் கண்டு வணங்கியதால் தேவர்களை கண்ட ஊர் என்பதே பின்னாளில் தேவர் கண்ட நல்லூர் என மருவியது. கிழக்கு பக்கம் வாயிலில், கோயில் நுழைவு வாயிலில் 5 கலசங்கள் உள்ளது. மகா மண்டபத்தில் 400 பேர் அமர்ந்து தரிசனம் செய்யலாம். விமானத்தில் ஒரு கலசம் உள்ளது. விநாயகர், மூலவரான குமரசாமி, வள்ளி, தெய்வானையுடன் கிழக்குப் பக்கம் பார்த்த வகையில் அருள் பாலிக்கிறார். இடது பக்கம் திருமண மண்டபம் உள்ளது. கோயில் எதிரில் பரந்தவெளியாகவும், பெரிய வேப்பமரம் உள்ளது. 1000 ஆண்டுகள் முற்பட்ட கோயில். கடந்த 2011 அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பிரார்த்தனை
திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கு சிறந்த பரிகார ஸ்தலமாவதால் ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் புது தானியங்களை காணிக்கையாக செலுத்துதல், காவடி, பால்குடம் எடுத்தல் போன்றவையாகும்.
தலபெருமை:
திருவாரூர் தியாகராஜர்கோயில், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் இக்கோயிலுக்குபெருமை சேர்க்கிறது.
தல வரலாறு:
வல்லால மகாராஜன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மண்ணில் பிறந்து விழுந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தை கீழே விழாமல் குறிப்பாக உயிருடன் பிறக்காமல் இருக்க வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் பார்வதியிடம் வரம் கேட்டனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் பிறக்காமல் அழிக்க மருத்துவச்சி வேடம் பூண்டு பார்வதி தேவி நடந்து வருகிறார். அப்போது வல்லால மகாராஜன் அவரை அழைத்து வந்து தன்மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்கிறான். இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பார்வதி தாயார் காத்தார்.
தன் பிள்ளையை மருத்துவச்சி கொன்று விட்டார் என்ற தகவலறிந்த வல்லால மகாராஜன் வாளால் வெட்ட முயன்ற நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய தேவியார் அந்த மகாராஜா தலையை வெட்டி விடுகிறார். தேவியாரின் ஆக் ரோஷத்தை போக்க பெருமாள் பெத்தரான்ய ஈசனாகவும், ஈசன் உத்தராண்ட ராயராகவும், பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியரின் ஆக்ரோஷத்தை தீர்த்தார்கள். இருப்பினும் தேவியார் ஆக்ரோஷம் அடங்காத நிலையில் முருகன் நேரில் சென்று தாயாரிடம் ஆக்ரோஷம் தீர்த்ததால் பின்நாளில் குமரன் கோயில் அமைத்துள்ளனர். அதன் பின் அப்பகுதியினர் கோயில் கட்டி முடமுழுக்கு செய்துள்ளனர். தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள விக்ரகங்கள் கருங்கல்லாக இருப்பதால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இருப்பிடம் : திருவாரூர்- மன்னார்குடி சாலையில் திருவாரூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவர்கண்ட நல்லுõர் மெயின் ரோட்டில் இருந்து மேற்கே ஒரு கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி,சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020