ராமநவமி. இது தவிர புரட்டாசி மாதம் முழுவதும் இந்த ஆஞ்சநேயருக்காக நேர்ந்து கொள்ளும் பக்தர்கள் மாதம் முழுவதும் விரதம் இருந்து, சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, மாதம் முழுவதும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
தல சிறப்பு:
திருவாரூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அதிகம் பக்தர்கள் வந்து செல்வது இங்கு தான்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
கிழக்கு நோக்கிய கோயில். இந்த கோயிலை எடுத்துக்கட்ட நவீனப்படுத்த சிலர் முன்வந்தாலும், கோயிலின் தொன்மை கெட்டுவிடும் என்பதற்காக இன்றுவரை பழைமையின் அடையாளங்களுடனே வைத்திருக்கிறார்கள். முக்கியமான கடைவீதியாக இந்த வீதி ஆகிவிட்டது. வியாபாரிகள் எல்லோரும் இந்த ஆஞ்சநேயரின் தீவிர பக்தர்கள். காலையில் கடை திறந்ததும் முதல் வழிபாடு இந்த அனுமனுக்குத்தான். அனுமன் சன்னிதியில் கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு, அதன்பிறகே வியாபாரத்தைத் தொடங்குகின்றனர்.
பிரார்த்தனை
இந்த அனுமனை உண்மையான பக்தியோடு வணங்குகிறவர்களோடு நியாயமான வேண்டுதல் எதுவா இருந்தாலும் நல்லபடியா நிறைவேற்றி வைப்பதால் பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் வெண்ணெய் மாலை சார்த்தி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
இவரை கும்பிட்டுப் போனா, எந்தக் காரியமும் ஜெயம்தான். ஏதாவது பிரச்சனையால் மனசு சோர்ந்திருந்தா இந்த அனுமாரை வந்து கும்பிட்டு பிரச்சனையை நல்லவிதமா தீர்க்க வேண்டியது உன் பொறுப்பு என்று சொல்லிட்டு, கற்பூரத்தை ஏத்தி வணங்கிட்டு வருதால் மனதில் ஒருவிதமான பயம் விலகி விடுகின்றன என்று கூறுகிறார்கள் பக்தர்கள். இந்த ஆஞ்சநேயரின் தீவிர பக்தர்கள் பலர், திருவாரூரை விட்டு வெளியூர்கள் பலவற்றில் சென்று குடியேறினாலும், திருவாரூர் வழியாக வந்தால் வீர ஆஞ்சநேயரை வழிபட்டு, வெண்ணெய் சாத்தி, மாலை அணிவித்து வணங்கிட்டு செல்கிறார்கள். பள்ளி மாணவர்களின் நேசத்திற்கு உரியவர் இந்த அனுமன். பள்ளியில் தேர்வு நடக்கும் சமயங்களில் காலாண்டு, அரையாண்டு, இறுதித் தேர்வுக் காலங்களில் இக்கோயில் வாசலில் மாணவர், மாணவியர் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இதனால் தேர்வில் எளிதாக இருக்கும் என்றும், அதனால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைத்தும் உயர்கல்வி பெற்று, உயர்பதவியில் பலர் இருப்பதாகச் சொல்கின்றனர்.
தல வரலாறு:
பிறக்க முக்தி எனப் போற்றப்படும் திருவாரூர் திருத்தலத்தில் ஏராளமான திருக்கோயில்கள். எல்லாம் புராதனக் காலத்தவை. சிபிச்சக்கரவர்த்தி காலம் தொடங்கி ஒவ்வொரு மன்னர் காலத்திலும் ஒவ்வொரு கோயில் எழுந்துள்ளது. ஆரூர் தியாகராஜர் பெரிய கோயிலைச் சுற்றியுள்ள தேரோடும் திருவீதி நான்கிலும் பத்தடி தூரத்திற்கு ஒரு கோயில் உள்ளது. சைவக் கோயில்களே நிறைந்துள்ள இவ்வூரில் ஒரு அனுமன் கோயில் தொன்மைச் சிறப்பாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் கீழவீதியில் சனிக்கிழமைதோறும் பல்லாயிரம் பக்தர்களைத் தன்வசம் ஈர்த்து, சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களுக்கு அருள் தரிசனம் தருகிறார், இந்த வீர ஆஞ்சநேயர். ஐந்நூறு ஆண்டுகள் பழமையான கோயில் என்று சொல்கிறார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:திருவாரூர் தியாகராஜர் கோயில் கீழவீதியில் உள்ளது வீர ஆஞ்சநேயர் கோயில்.