திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நவ.27ல் துவங்குகிறது
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோக நிலையில் இருக்கும் பைரவருக்கு கார்த்திகை வளர்பிறை பிரதமை திதியின்று சம்பக சஷ்டி விழா துவங்கி ஆறுநாட்கள் நடைபெறும்.நவ.27 காலை 9:00 மணிக்கு பைரவர் சன்னதி அருகே யாகசாலை மண்டபத்தில் அஷ்டபைரவர் யாகம் துவங்குகிறது. பகல் 12:30 மணிக்கு பைரவருக்கு அபிஷேகம்,ஆராதனை நடந்து வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பார். மீண்டும் மாலை 4:30 மணிக்கு யாகம் துவங்கி நடைபெறும். ஆறு நாட்களிலும் தினசரி இரு வேளை யாகபூஜை நடைபெறும். ஏற்பாட்டினை தேவஸ்தானம், சம்பக சஷ்டி விழாக்குழுவினர் செய்கின்றனர்.