கோவை சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2026 11:03
கோவை: சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில் 57வது ஆண்டு விழா கொடியேற்றம், மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் சூழ, நேற்று நடந்தது. சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு, கோயில் தந்திரி சிவப் பிரசாத் நம்பூதிரி தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் கொடி யேற்ற உற்சவம் நடந்தது. பக்தர்கள் தேங்காய், மலர், நெல், அரிசி, மஞ்சள், அவல், நாணயம் உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாக நிறைபறை சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.