புதுச்சேரி அய்யப்ப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2019 02:11
புதுச்சேரி: புதுச்சேரி கோவிந்த சாலை பாரதிபுரம் அய்யப்ப சுவாமி கோவில் 7 நாட்கள் பிரம் மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று 17ல், துவங்கியது.புதுச்சேரி கோவிந்தசாலை பாரதி புரத்தில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில், மண்டல மகர விழா பிரம்மோற்ச விழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. முன்னதாக காலை மகா கணபதி ஹோமம், 25 கலசாபிஷேகம், சந்தன அபிஷேகம், ஸ்ரீபூதபலி, மாலை புஷ்பாபிஷேகம் நடந்தது. சிவா எம்.எல்.ஏ., அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.