பதிவு செய்த நாள்
18
நவ
2019
02:11
புதுச்சேரி: புதுச்சேரி கோவிலில் முதல் முறையாக, அங்காளம்மன் கோவிலில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய சோலார் பேனல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதி கரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு, புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டத்திற்கு மாற வேண்டும் என, மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை மூலம், பல்வேறு அரசு துறை கட்டடங்களில், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி கோவில்களில் முதல் முறையாக, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில், ஒரு கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், சோலார் பேனல் அமைக்கப்பட்டு,நேற்று துவக்கி வைக்கப்பட்டது. முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.மின்சார தேவைக்கான செல வினத்தை குறைத்து, கோவில் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தும் நோக்கத்தில், இக் கோவிலில் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. வைசியாள் வீதியை சேர்ந்த சூரஜ்குமார் என்பவர், சொந்த செலவில் அமைத்து கொடுத்துள்ளார்.
கோவில் அறங்காவலர் விஜயகுமார், தனி அதிகாரி ஜனார்த்தனன் பங்கேற்றனர். இதை முன்னுதாரணமாக கொண்டு, புதுச்சேரியில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் தனியார் நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அமைப்பு ஏற்படுத்தினால், மின் தேவைக்கான செலவின த்தை குறைக்கலாம்.