பதிவு செய்த நாள்
18
நவ
2019
02:11
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர், ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். கரூர், திருச்சி நெடுஞ்சாலையில் கருப்பத்தூர் அருகில் ஐயப்பன் கோவில் உள்ளது. காவிரி கரையில் கோவில் அமைந்துள்ளது.
தமிழகத்தின், முதல் ஐயப்பன் கோவில் என்ற சிறப்பு உடையது. கடந்த, 2018ல் கோவிலில் கும் பாபிஷேகம் நடந்தது. தற்போது கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முறையாக விரதம் இருக்க, மாலை அணிவது வழக்கம். இந்தாண்டு வழக்கம்போல் நேற்று (நவம்., 17ல்) காலை, 7:00 மணிக்கு, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கருப்பத்தூர் காவிரி ஆற்றில் குளித்து விட்டு, ஐயப்பன் கோவில் சன்னதியில் கோவில் குருக்களிடம் மாலை அணி ந்து, சிறப்பு பூஜை செய்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் குருக்கள் செங்குட்டுவேல், விக்னேஷ்வர சிவம், சபரீஸ்வரசிவம் ஆகியோர் கொண்ட குழுவினர் பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித் தனர். கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.