கூடலுார் சபரிமலை சீசன் துவக்கம் குமுளியில் துப்புரவு பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2019 02:11
கூடலுார் : சபரிமலை சீசன் துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, எல்லைப்பகுதியான குமுளியில் துப்புரவு பணிகள் நடந்தன.
தமிழக-கேரள எல்லையான குமுளியில் உள்ள தமிழகப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி ரோட்டையே பஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது சபரிமலை சீசன் துவங்கி யுள்ளதைத் தொடர்ந்து தமிழக பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் கூடலுார் நகராட்சி சார்பில் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கூடுதலான ஐயப்ப பக்தர்கள் இவ்வழியே வருவதால், குமுளியில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான ஆய்வை நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் மேற்கொண்டனர்.சீசன் முடியும் வரை குமுளியில் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.