சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் முன்பதிவு இன்று தொடக்கம்
பதிவு செய்த நாள்
21
நவ 2019 04:11
சேலம்: சென்னையிலிருந்து இயக்கப்படும், சபரிமலை சிறப்பு ரயிலுக்கு, முன்பதிவு இன்று தொடங்குகிறது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்கு, பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை, சென்ட்ரல் - கொல்லம் சுவிதா சிறப்பு ரயில், டிச., 6, 13, 20, 27, ஜன., 10ல், சென்னையிலிருந்து இரவு, 8:30க்கு கிளம்பி, சேலம், ஈரோடு, கோவை வழியே, அடுத்தநாள் மதியம், 12:00 மணிக்கு கொல்லத்தை அடையும்.
சென்னை - கொல்லம் சுவிதா சிறப்பு ரயில், டிச., 22ல், சென்னையிலிருந்து மாலை, 4:15க்கு புறப்பட்டு, சேலம் வழியே, மறுநாள் காலை, 10:10க்கு கொல்லத்தை அடையும். சென்னை - கொல்லம் சுவிதா சிறப்பு ரயில், டிச., 21 இரவு, 8:30 மணிக்கு, சென்னையிலிருந்து கிளம்பி, அடுத்தநாள் மதியம், 12:00 மணிக்கு கொல்லத்தை அடையும். கொல்லம் - சென்னை சுவிதா சிறப்பு ரயில், டிச., 8, 15, 29, ஜன., 5, 19ல், கொல்லத்திலிருந்து மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, கோவை, சேலம் வழியே, மறுநாள் காலை, 7:20 மணிக்கு சென்னையை அடையும். திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில், ஜன., 1, மாலை, 3:45க்கு திருவனந்தபுரத்தில் கிளம்பி, சேலம் வழியே, அடுத்தநாள் காலை, 9:45க்கு சென்னையை அடையும். மேற்கண்ட ரயில்களின் முன்பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு தொடங்குவதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|