கோவில் வளாகத்தில் ஆன்மிக குரு பங்காரு சித்தர் அம்மா குரு பீட திருப்பணிகள் முடிந்து, திருவுருவ சிலை 9 நாட்கள் கடலுார் மாவட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மன்றங்களுக்கு கரிகோலமாக எடுத்து செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் சம்பத், நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், அ.தி.மு.க.நகர செயலாளர் மோகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், துணை சேர்மன் சிவா, அண்ணா பொறியியல் கல்லுாரி முன்னாள் புலமுதல்வர் செந்தில்குமார், மேல்வருத்துார் ஆதிபராசக்தி கடலுார் மாவட்டதலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், சக்தி பீட தலைவர் டாக்டர் முத்துசெழியன், துணை தலைவர் ராஜசேகர், கிழக்குமண்டல பிரசார இணை செயலர் எழுமலை, மண்டல துணை தலைவர் கோவிந்தராஜன், இளைஞரணி சுந்தர்ராஜன், மத்திய பிரசார குழ ஓருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் பாண்டு உள்ளிட்ட ஆயிரக்கனக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர்.