விழுப்புரம் : பூவரசங்குப்பம் லஷ்மிநரசிம்ம லஷ்மிநரசிம்ம பக்தஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லஷ்மிநரசிம்மர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 6 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், அபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து, 8.30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி செய்திருந்தார். இதேபோல் பூவரசங்குப்பம் லஷ்மிநரசிம்ம பக்தஆஞ்சநேயருக்கு அதிகாலை 5 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.