சிவன், பெருமாள் கோயில்களில் கார்த்திகை: நயினார்கோவிலில் நாகதீபம் ஏற்றினர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2026 10:11
பரமக்குடி: பரமக்குடி, நயினார்கோவிலில் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் கார்த்திகை விழா நடந்தது.
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் முன்பு இரவு 8:00 மணிக்கு சொக்கப்பனை எரிக்கப்பட்டது. எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில் முன்பு சுவாமி எழுந்தருளிய நிலையில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. மகா நாக தீபம்: நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் முன்பு சந்தியா வந்தன மண்டபத்தின் மீது மகா நாகதீபம் ஏற்றப்பட்டது. தினமும் 65 லி., வீதம் 195 லி., வரை தீப எண்ணெய் ஊற்றப்பட்டு 3 நாட்கள் ஒளி தரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சராத்ர தீபம்: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பாஞ்சராத்ர தீப விழாவையொட்டி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் முன்பு இரவு 9:00 மணிக்கு சொக்கப்பனை எரிக்கப்பட்டது. இதே போல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் முன்பு முதலாமாண்டு கார்த்திகை விழாவைவில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. தொடர்ந்து 18 படி பூஜை, ஹரிவராசனம் பாடப்பட்டு இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.