சூரிய பகவானுக்கு ஜோதி வடிவமாய் காட்சி தந்த அண்ணாமலையார்; திருவண்ணாமலையில் பரவசம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2026 11:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மஹாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மலை உச்சியில், 11 நாட்களுக்கு தீபம் எரியும். 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீபம் இன்று (நவ., 26) காலை சூரிய உதயத்தின்போது சூரிய பகவானுக்கு ஜோதி வடிவமாய் காட்சி தந்தது. கடந்த நவம்பர் 24-ஆம் தேதி மாலை ஏற்றப்பட்ட இந்த மகா தீபம், கடும் குளிர் மற்றும் பலத்த காற்றையும் தாண்டி தொடர்ந்து 3-வது நாளாகச் சுடர்விட்டு எரிந்து வருகிறது. இன்று அதிகாலை மலை உச்சியில் கொழுந்துவிட்டு எரியும் மகா தீபமும், உதயமாகும் சூரியனும் ஒரே நேர்க்கோட்டில் இணைவது போன்ற இந்த அரிய காட்சியைப் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.