திருக்கோவிலுார் : மணம்பூண்டி வந்த ஐயப்ப தர்ம பிரசார ரதயாத்திரையை ஐயப்ப பக்தர்கள் வரவேற்று வழிபாடு செய்தனர்.சபரிமலையிலிருந்து ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் புறப்பட்ட ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை நேற்று திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டி வந்தது. ஐயப்பன் கோவில் வளாகத்தில் செந்தில்குமார் தலைமையிலான ஐயப்ப பக்தர்கள் வரவேற்றனர்.முன்னதாக இதேபோல் அரகண்டநல்லுாரில் பத்மநாப குருசாமி தலைமையிலான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.