பதிவு செய்த நாள்
25
நவ
2019
02:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் எழுந்த ருளிய சத்தியகிரீஷ்வரர், கொடிக்கம்பம் அருகில் மயில், நந்தியுடன் எழுந்தருளியுள்ள பெரிய நந்திக்கு திரவிய அபிஷேகம், பூஜை நடந்தன.
மலைக்குப்பின்புறமுள்ள பால்சுனை கண்ட சிவபெருமான், மலை மீதுள்ள காசி விஸ்வநாதர், சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயில், மலை அடிவாரத்திலுள்ள பழநி ஆண்டவர் கோயில், பசுபதீஸ்வரர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர்,பாண்டியன்நகர் கல்யாண விநா யகர் கோயில், விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலிலும் வழிபாடுகள் நடந்தன.
மேலுார்: தும்பைப்பட்டி சிவாலயாபுரம் சங்கரநாராயணர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.