பதிவு செய்த நாள்
19
ஏப்
2012
11:04
கடலூர்: திருவகிந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் ஸ்வஸ்திஸ்ரீ நந்தன வருஷம், சித்திரை மாதம் 13ம் தேதி (25.4.2012) புதன்கிழமை மிருகசீரிஷ நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினம் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம், வைகானஸ ஆகம பகவத் சாஸ்திரப்படி, கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி சிறப்பாக நடைபெற உள்ளது.
சித்திரை மாதம் 10ம் தேதி (22.4.12) ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கு யாகசாலை சுத்தியர்த்தம், புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், பவுண்டரீக குண்டத்தில் அக்னி பிரதிஷ்டை, அகல்மஷஹோமம், பரிவார கும்ப நிர்மாணம், வாஸ்து பத பூஜை, கும்ப ஆராதனம், பூர்ணாஹுதி. அன்று மாலை 6-7 மணிக்கு துலா லக்னத்தில் பகவத் அநுக்ரஹம், மிருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வேத திவ்ய பிரபந்த தொடக்கம், பிரதான குண்டங்களில் அக்னி பிரதிஷ்டை, சக்தியாககர்ஷணம், பரிவார கும்ப ஆவாஹணம், கும்ப ஆராதனம், ஹோமங்கள் பூர்ணாஹுதி.
சித்திரை மாதம் 11ம் தேதி (23.4.12) திங்கள் கிழமை காலை 7 மணிக்கு யாகசாலை புண்யாக வாசனம், அக்னி பிரணயணம், கும்ப ஆராதனம், மஹா சாந்தியில் ஸப்த திரவிய ஹோமம், நித்ய விசேஷ ஹோமங்கள், பூர்ணாஹுதி. அன்று மாலை 5.30 மணிக்கு புண்யாக வாசனம், அக்னி பிரணயணம், கும்ப ஆராதனம், மஹா சாந்தியில் ஸப்த திரவிய ஹோமம், நித்ய விசேஷ ஹோமங்கள், பூர்ணாஹுதி.
சித்திரை மாதம் 12ம் தேதி (24.4.12) செவ்வாய் கிழமை காலை 7 மணிக்கு புண்யாக வாசனம், அக்னி பிரணயணம், கும்ப ஆராதனம், மஹா சாந்தியில் ஸப்த திரவிய ஹோமம், நித்ய விசேஷ ஹோமங்கள், பூர்ணாஹுதி. அன்று மாலை 4 மணிக்கு அதிவாஸத்ரய ஹோமங்கள் விமானங்களுக்கு நயநோன் மீனலம் விசேஷ மஹா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாஸம், ஹவுத்திரம், ஸர்வ தேவார்ச்சனம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹுதி.
சித்திரை மாதம் 13ம் தேதி (25.4.12) புதன் கிழமை காலை 5 மணிக்கு விஸ்வரூபம், புண்யாக வாசனம், அக்னி பிரணயணம், கும்ப ஆராதனம், விசேஷ ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் ஆராதனம், வேத, திவ்ய பிரபந்த சாற்றுமுறை, ஆசீர்வாதம், பிரம்ம கோஷம், கோஷ்டி. இரவு தங்க சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவநாதன், உபய நாச்சியாருடன் திரு வீதி புறப்பாடு நடைபெறும்.