ஒரு குடும்பத்தில் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரச்னை பெரிதானது. சபை போதகர் பிரச்னையைத் தீர்க்க இருவரையும் விசாரித்தார்.
கடந்த வாரம் தான் அவளுக்கு கார் வாங்கித் தந்தேன். ஆறுமாதத்திற்கு முன்னதாக புது வீடு கட்டி குடியமர்த்தினேன். சில நாட்களுக்கு முன்னதாக கூட விலை உயர்ந்த புடவைகள் வாங்கி கொடுத்தேன். இவளுக்கு என்ன குறை வைத்தேன் என நீங்களே விசாரியுங்கள் என்றார் கணவர்.
அந்த பெண்ணும் எதையும் மறுக்கவில்லை. ஆனால் அவள், ஐயா! பொருள் ஏதும் எனக்கு வேண்டாம். நான் குடிசையில் கூட குடியிருக்க தயார். பஸ்சில் கூட பயணம் செல்கிறேன். ஆடம்பர உடை வேண்டாம். மானம் காக்க எளிய ஆடை போதும். இவர் எந்நேரமும் குடியிலும், சிற்றின்பத்திலும் இருக்கிறாரே? என் மனம் என்ன பாடுபடும்? எனச் சொல்லி அழுதாள். இப்போது போதகருக்கு உண்மை புரிந்தது. மனைவிக்கு அன்பை வழங்குவது கணவனின் முதல் கடமை. ஆடை, அணிகலன்கள் இரண்டாம்பட்சம் தான். பொருட்களை விட மனைவிக்கு தேவை அன்பே. அதுவே குடும்பத்தின் ஆதாரம்.