ராமநாதபுரம்: உத்தரகோசமங்கையில் 3000 ஆண்டுகள் பழமையான மங்களநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில்ராஜகோபுரம் பராமரிப்பின்றி செடிகள், மரங்கள் முளைத்து வளர்வதால் கோபுரம் பலமிழக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி, அம்பாள் சன்னதி, மரகத நடராஜர் சன்னதிகள் உள்ளன. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுரமும், சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பாள்சன்னதி முன்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ராமநாதபுரம் தேவஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ளது. இங்குள்ள ராஜ கோபுரத்தில் முறையாக பராமரிப்பு பணிகளை செய்வதில்லை. கோயில் கோபுரங்களில் பறவைகள் எச்சத்தால் செடிகள், மரங்கள் வளர்ந்துள்ளது. இந்த மரங்களின் வேர்கள் கோபுரங்களில் படரும் போது ராஜகோபுரம் பலமிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்று கோபுரங்களில் செடிகள் வளரும் போது ஆரம்பத்திலேயே அகற்ற வேண்டும். அப்போது தான் பழங்கால கோபுரங்களை பாதுகாக்க முடியும். கோயில் நிர்வாகத்தினர் கோபுரங்களில் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.