Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டு தலங்களை பாதுகாக்க உத்தரவு திருவண்ணாமலை தீப திருவிழாவில் துர்க்கையம்மன் உற்ஸவம் திருவண்ணாமலை தீப திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: மழையிலும் கலையாத பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: மழையிலும் கலையாத பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 நவ
2019
04:11

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரம் செய்தனர். இரவு 11.30 மணிக்கு சிவ வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களை பாடினர். அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். பக்தர்கள் சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் செல்வம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.

மழையிலும் கூட்டம்: செஞ்சி மற்றும் மேல்மலையனூர் பகுதியில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை இருந்தது. இருந்த போதும் பக்தர்கள் கூட்டம் கலையாமல் வழக்கம் போல் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.9ல்) மலையப்பசுவாமி அனுமன் ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் நான்காவது புதன்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஆறாவது நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 11:00 மணி முதல் 11:30 மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; சாரதாம்பாள் கோவில் நவராத்திரி சிறப்பு பூஜையில் நவக்கிரக மிருத்யுஞ்ஜய ஹோமம் ... மேலும்
 
temple news
கொட்டாம்பட்டி; ஒட்டக்கோவில்பட்டி டி வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் புரட்டாசி மாத திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar