Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவிலில் ... ராமேஸ்வரம் கோயில் காணிக்கை ரூ.78.93 லட்சம் ராமேஸ்வரம் கோயில் காணிக்கை ரூ.78.93 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமாரநல்லூர் தேவி கோயில் விழா டிச.2ல் ஆரம்பம்
எழுத்தின் அளவு:
குமாரநல்லூர் தேவி கோயில் விழா டிச.2ல் ஆரம்பம்

பதிவு செய்த நாள்

29 நவ
2019
10:11

கோட்டயம் :கேரளா மாநிலம் கோட்டயம் அருகே குமாரநல்லுார் தேவி கோயில் ஆண்டு திருவிழா டிச.,2ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருகார்த்திகை திருநாளான டிச.,10ல் மெகா அன்னதானம் நடக்கிறது. டிச.,2 மாலை 4:00 மணிக்கு தலைமைதந்திரி கிருஷ்ணன் நம்பூதிரி தலைமையில், தந்திரி அச்சுதன் நம்பூதிரி, மேல்சாந்தி நாராயணன் சிவதாஸ் முன்னிலையில் கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு கலைநிகழ்ச்சிகளை நடனக்கலைஞர் பாரீஸ் லட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து கலாசார மாநாடு நடக்கிறது. ஜோஸ் கே மாணி எம்.பி., திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பங்கேற்கின்றனர். தினமும் மாலையில் கலைநிகழ்ச்சிகள், கலாசார மாநாடு, கவியரங்கு, பஞ்சவாத்தியம் போன்றவை நடக்கின்றன. காலையிலும், மாலையிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. திருகார்த்திகை நாளான டிச., 10 அதிகாலை 2:00 மணிக்கு கார்த்திகை தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.


சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காலை 6:00 மணிக்கு அம்மன் ஆறாட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. காலை 9:00 மணி முதல் கோயில் வளாகத்தில் உள்ள தேவி விலாசம் ஆரம்ப பள்ளியில் மகா பிரசாதஊட்டு எனப்படும் மெகா அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.பகல் 2:00 மணி வரை நடக்கும் இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். மாலை 5:30 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 11:30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.அன்று காலை முதல் இரவு வரை கோயில் கலை அரங்கில் பல்வேறு இசை, கலாசார நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.டிச.,12 அதிகாலை 2:30 மணிக்கு அம்மன் ஆராட்டிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்த பிறகு, அதிகாலை 4:00 மணிக்கு திருக்கொடியிறங்குகிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.மேலும் விபரங்களுக்கு 0481- - 231 2737 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழாவின், ஐந்தாம் நாளான இன்று கருட சேவை ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar