Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ’ஆன்மிக அறிவுடன் குழந்தை வளரணும்’ குன்றத்து யானை முகாமிற்கு தயார்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுற்றுலா, ஆன்மிக தலமான சுருளி அருவி
எழுத்தின் அளவு:
சுற்றுலா, ஆன்மிக தலமான சுருளி அருவி

பதிவு செய்த நாள்

30 நவ
2019
02:11

சுருளி: அருவி இன்று துவங்கும் சாரல் விழாவிற்கென களைகட்டியுள்ளது. தென் மாவட்டங் களின் ’சின்ன குற்றாலம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. அருவிக்கு தண்ணீர் மேகமலையில் இருந்து மலைக்குன்றுகள், அடர்ந்த காடுகளின் வழியாக விழுகிறது. பல்வேறு மூலிகைகள் மீது பட்டு விழுவதால், இந்த தண்ணீரு க்கு நோய்களை தீர்க்கும் திறன் உண்டும் என்று கூறுகின்றனர்.

குகைக்கோயில்கள்: சுருளி அருவியில் சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்துள்ளனர். சிவனுக் கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது பூமியின் வடபகுதி துாக்கியும், தென்பகுதி கீழிறங்கி செல்வதை தடுக்க, அகத்தியரை, சிவபெருமான் இங்கு அனுப்பியுள்ளார். அவர் இங்கிருந்து சிவபார்வதி திருமணத்தை பார்த்துள்ளார். மேலும் மலைமேல் உள்ள லாட சன்னாசியப்பன் கோயில் பிரசித்திபெற்றதாகும். இந்திய கட்டடக்கலைக்கு இங்குள்ள குகைக்கோயில்கள் சான்றாக அமைந்துள்ளன.

குறிப்பாக இமயகிரி சித்தர் தவம் புரிந்த இடம் மிகவும் சிறப்பானதாகும். இங்கு விபூதி குகை காளிகுகை, கைலாசநாதர் குகை, அபுபக்கர் மஸ்தான் குகை உள்ளிட்ட பல குகைக் கோயில் கள் உள்ளன. இதில் விபூதி குகையில் இன்றும் தரையில் கிடக்கும் மண் விபூதியாகவே உள்ளது. அங்கு செல்பவர்கள் அதை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வர். இங்குள்ள பூதநாராய ணர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். அரக்கர்களை அழிப்பதற்காக தேவர்கள் ரகசிய கூட்டம் நடத்திய போது, அவர்களுக்கு பாதுகாவலாக நாராயணர் பூத வடிவில் காவல் புரிந்த தாக வரலாறு கூறுகிறது.

இங்குள்ள சுருளி வேலப்பர்கோயில், கோடிலிங்கம் கோயில்களும் பிரசித்திபெற்றவை. வேலப்பர் கோயில் ஓம் பிரணவ மந்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டால், காதுகளில் ஓம் மந்திரம் ஒலிக்கும். இந்த கோயில் அருகில் தீர்த்தம் ஆண்டுமுழுவதும் விழுகிறது. இலை செடிகளையும் பாறைகளாக மாற்றும் தன்மை இந்த தண்ணீருக்கு உண்டு என்று ஆய்வுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.தீர்த்தம்: தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கோயில்களின் கும்பாபிஷேகத்திற்கு இங்கு வந்து தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது. இங்குள்ள கோடிலிங்கம் கோயிலில் கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்ய கணேசன் என்பவர் ஆரம்பித்து தற்போது ஆயிரக்கணக்கில் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஆதிஅண்ணாமலையார் கோயில், ஐயப்பன் கோயில்களும் பிரசித்தி பெற்றவையாகும். குறிப் பாக பழநி கோயிலில் உள்ள முருகன் நவபாஷான சிலையை இங்கிருந்து தான், போகர் சித்தர் செய்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. முன்னதாக அந்த சிலை இங்கு நிறுவப்பட்டு ள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது. இன்றைக்கும் அரவமாக ரிஷிகளும், முனிவர்களும் வாழ்ந்து வரும் புண்ணிய பூமியாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான இன்று காலை கற்பக ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதி உலா சென்று ... மேலும்
 
temple news
திருப்பதி; ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருக்குடைகள் இன்று திருப்பதி வந்தது. திருக்குடைகளுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து, திருப்பதி திருமலை கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar