சரவணம்பட்டி:சேரன்மாநகர் விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள, ஆசிரியர் காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று (டிசம்., 1ல்)அதிகாலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது. காலை 9:00 முதல் 10:00 மணி வரை, கும்பாபிஷேகம் நடந்தது. சின்னவேடம்பட்டி கவுமார மடாலயம் குமரகுருபர அடிகள் திருக்குட நன்னீராட்டு விழாவை, முன்னின்று நடத் தினார். தொடர்ந்து, தசகானம், தச தரிஷனம், மகாபிஷேகம், அன்னதானம் நடந்தது.