பதிவு செய்த நாள்
02
டிச
2019
02:12
கோவை:ஆறாயிரம் அடி உயரத்தில் உள்ள வெள்ளிங்கிரி மலைக்கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளில்,பக்தர்கள் புடை சூழ, பிரம்மாண்ட கொப்பரையில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.தென்கயிலாயம் என்றழைக்கப்படும், புனிதமான வெள்ளிங்கிரி மலைக் கோவில், கோவையிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்திலுள்ளது.
இங்கு கடந்த பத்தாண்டாக, கார்த்திகை தீபம் கொப்பரையில் ஏற்றப்படுகிறது.டிச., 8ம் தேதி, பேரூராதீனத்திலிருந்து, ஊர்வலமாக புறப்படும் பக்தர்கள், கால்நடையாக பல்வேறு கிராமங் களை கடந்து, அங்குள்ள பக்தர்களை, இணைத்து, பக்திப்பயணமாக இரண்டு நாட்கள் மலை ஏறுகின்றனர்.டிச., 10ம் தேதி வெள்ளிங்கிரி மலையின், ஏழாவது மலையில் கிரிவலமாக வருகின்றனர். அதன் பின்பு மலை முகட்டில் உள்ள, மலைக்குகையில் காட்சி தரும் சிவபெரு மானுக்கு அபிஷேகங்களையும், சிறப்பு பூஜைகளையும் செய்கின்றனர்.அதன் பின் பேரூரா தீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், உள்ளிட்ட சிவாச்சாரியார்கள், ஆதீனங்கள் இணை ந்து, பிரம்மாண்ட கொப்பரையில், மாலை 4:00 மணிக்கு, கார்த்திகை தீபம் ஏற்று கின்றனர். 110 கிலோ எடை கொண்ட திரி போடப்படுகிறது, 3,000 கிலோ எடை கொண்ட நெய், மலை மீது கொண்டு செல்லப்படுகிறது.தொடர்ந்து பல ஆண்டுளாக நடைபெறும் இந்த வைபவம், இந்த ஆண்டும் நடக்கிறது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.