பதிவு செய்த நாள்
03
டிச
2019
02:12
அன்னுார்:புள்ளாமடை, ராஜவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (டிசம்., 2ல்) நடந்தது. புள்ளாமடையில், ராஜவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் பாலமுருகன், கருவண்ண ராயர், வீரசுந்தரி, பொம்மிதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.
இதையடுத்து, கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் (டிசம்., 1ல்) விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. மாலையில், முதற்கால பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று (டிசம்., 2ல்) அதிகாலையில், இரண்டாம் கால பூஜை நடந்தது. பின்னர், யாகசாலையிலிருந்து புனிதநீர் அடங்கிய குடங்கள் கோபுரம் மற்றும் சன்னிதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 5:45 மணிக்கு விவேக் சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் மகா அபிசேகம், அலங்காரம் நடந்தது.