பதிவு செய்த நாள்
03
டிச
2019
02:12
நடுவீரப்பட்டு: சிஎண்., சி.என்.பாளையம் அடுத்த கொட்டிக்கோணாங்குப்பம் வள்ளி தேவசேனா சுப்பரமணியர் சுவாமி கோவிலுக்கு, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண் யாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பிரவேசம் நடந்தது.இரவு 7:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று (டிசம்., 2ல்) நேற்று முன்தினம் (டிசம்., 1ல்) ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்து, 8:30 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து மகா கும்பாபிேஷகம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.