திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2019 01:12
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், கார்த்திகை மாதம் 3வது திங்கள் கிழமை, மூன்றாவது சோமவார சிறப்பு வழிபாடு நடந்தது.
பிற்பகல் 2:00 மணிக்கு அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு ஆகமவிதிப்படி வலம்புரி, இடம்புரி 108 சங்காபிஷேகம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர் வெள்ளி நாகாபரண சிறப்பு அலங்காரத்திலும், அம்பாள் பெரியநாயகி வெள்ளி கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தனர்.இரவு 9:00 மணிக்கு உற்சவர் வீதியுலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.