மெய்சிலிர்க்க வைக்கும் ஓலைச்சுவடி: தலைமுறையினர் அறிய முயற்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2019 02:12
விருதுநகர்: ஓலைச் சுவடிகள் தமிழர்களின் பாரம்பரியமாகும். சங்க காலத்திலிருந்து காகித த்தில் அச்சு கோர்க்கும் காலம் வரும் வரை தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் ஓலைச்சுவடியில் தான் பொறிக்கப்பட்டு வந்தன. தமிழின் தொன்மையை நாம் ஓலைச்சுவடியை கொண்டே அறிய முடியும்.
இந்த ஓலைச்சுவடிகள் நுாற்றாண்டு தோறும் புதுப்பிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகின்றன. கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம், அகத்தியர் மருத்துவ குறிப்புகள், 18 சித்தர்களின் மருத்துவ குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகள் ஓலைச்சுவடிகளில் உருவாக்கப்பட்டவை தான்.
ஒரு ஓலைச்சுவடியை 700 ஆண்டுகள் வரை தான் பராமரிக்க முடியும். பின் மீண்டும் புதுப் பிக்கப்பட்டு படிவோலையாக மாற்றப்படுகிறது. தற்போது நம் படிப்பவை அனைத்தும் படிவோலை தான். மாணிக்கவாசகர் பாட இறைவனே எழுதிய ஓலைச்சுவடி தான் மிகவும் பழமையான ஓலையாக கருதப்படுகிறது.இதை இன்னும் புதுச்சேரி அம்பலத்தடிகள் மடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிவராத்திரிக்கும் பூஜிக்கப்படுகிறது.
தொன்மையான பல ஓலைச்சுவடிகள் இன்றும் தஞ்சை பல்கலை, சரஸ்வதி மஹாலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விரல்களை தண்ணீரில் தோய்த்து ஓலைச்சுவடியை இடமிருந்து வலமாக தேய்த்தால் ஓலைச்சுவடியை வாசிக்க இயலும். தொன்மை நடையில் வாசிப்பது மிகவும் கடினமான ஒன்று. இதை இக்கால இளைஞர்களுக்கு எடுத்து செல்லும் வகையில விருதுநகர் வன்னியபெருமாள் பெண்கள் கல்லுாரி செமஸ்டர் விடுமுறைகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்துகிறது.
தமிழ்த்துறை சார்பில் நடத்தப்படும் இந்த வகுப்பிற்கு ஆண்டுதோறும் ராஜபாளையத்தை சேர்ந்த ஓய்வு தொல்லியல் உதவி இயக்குனர் சந்திரவாணன் பாடம் நடத்துகிறார்.
அதே போன்று இந்தாண்டும் அகத்தியர், தேரையரின் மருத்துவ குறிப்புகளை மாணவிகளுக்கு எளிதில் விளக்கியும், ஓலைச்சுவடியை வாசிக்கவும் கற்று கொடுத்தார் ஒரு ஓலைச்சுவடியை 700 ஆண்டுகள் வரை தான் பராமரிக்க முடியும். பின் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு படிவோலை யாக மாற்றப்படுகிறது.