பதிவு செய்த நாள்
07
டிச
2019
02:12
கரூர்: கரூர் அடுத்த, நத்தமேட்டுபாளையத்தில் பகவதியம்மன் கோவில் திருவிழா கடந்த, 1ல் தொடங்கியது. இதையடுத்து, பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, தீர்த்த குடங்கள் எடுத்து கோவிலுக்கு வந்தனர். அம்பாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (டிசம்., 5ல்)பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் முன், அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பொங்கல் வைத்து பகவதியம்மன், மாரியம் மன் முன் பொங்கல் படையல் வைத்து, அபிஷேகம் செய்தனர். இரவு, 7:00 மணிக்கு மேல் பெண்கள் மாவிளக்கை கோவிலுக்கு கொண்டு வந்து, பூஜை செய்தனர். இரவு வானவேடிக்கை நடந்தது.