பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2019 12:12
பரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்தது. இக்கோயிலில் நேற்று முன்தினம் காலை மூலவர் பரமஸ்வாமி,உற்ஸவர் சுந்தரராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் பெருமாளுக்கு துளசிகளால் அர்ச்சனை செய்தனர். மேலும் காலை 9:00 மணி தொடங்கி,இரவு 9:00 மணி வரை லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. அப்போது பெருமாள் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு மேல்தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு புராணம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.