மேட்டுப்பாளையம்:தெய்வீகத் தமிழைக் காக்க, மேட்டுப்பாளையம் மாதேஸ்வரர் கோவிலில், கோமாதா பூஜையும், இந்து சங்கமம் விழாவும் நடந்தன.கோவிலில் மாடுகளை வரிசையாக நிறுத்தி பூஜை செய்தனர். முன்னதாக யாகபூஜை செய்து, மாடுகளுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கோவை மாவட்ட இந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.ஆர்.எஸ்.எஸ்., விபாக் கார்யவாஹ் சித்தரேஸ், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், ஆலய நற்பணி சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் குமார் உட்பட இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.