திருப்பூர்: பெருமாநல்லுார் அருகேயுள்ள ஆலங்காடு முத்தாரம்மன், பட்டத்தரசி அம்மன் கோவிலில் ஸ்ரீ கொண்டத்துக்காளியம்மன் பழனி தைப்பூச திருவிழா பாதயாத்திரை குழுவினர் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதில், 108 லிட்டர் பால் அபிஷேகம், 108 இளநீர் அபிஷேகம், 108 சங்காபிஷேகம், 108 புஷ்பாபிஷேகம், 108 கிலோ விபூதி மற்றும் 58க்கும் அதிகமான மூலிகை வாசனை திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து முத்து கவச அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.