செஞ்சி: செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
செஞ்சி பீரங்கி மேடு அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் அபீதகுஜாம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் பரணி தீபமும் ஏற்றப்பட்டது. மாலை 5 மணிக்கு அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அர்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு தியான மண்டபத்தின் மேல்உள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றினர். தொடர்ந்து வான வேடிக்கையும் , பக்தர்களுக்கு பிரசாத விநியோகமும் நடந்தது. இதில் அறங்காவலர், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.