மதுரை நன்மைதருவார் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2019 02:12
மதுரை: மதுரை மேலமாசி வீதியில் சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று கோயில் தெப்பக்குளத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டன. சுவாமி, அம்மன் புறப்பாடு நடந்தது. தீபாராதனைக்கு பின் சொக்கப்பானை ஏற்றப்பட்டது. கோயில் ஸ்தல அர்ச்சகர் தர்மாராஜ் சிவன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.