மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை நீர் 40 ஆண்டுகளுக்கு பின் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2019 02:12
மதுரை, நாற்பது ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைகையில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு கால்வாய் மூலம் தண்ணீர் வழங்கும் பணி இன்று (டிச.,11) துவங்குகிறது. ஏற்பாடுகளை மாநகராட்சி, பொதுப் பணித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். ஆற்றுக்கும், பனையூர் கால்வாய்க்கும் இடையை ஏ.வி.பாலம் அருகில் இணைப்பை ஏற்படுத்த 75 மீட்டர் நீளத்திற்கு இணைப்பு கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. தடுப்பணை ஷட்டரை அடைத்தால் தெப்பக்குளத்திற்கு தானாகவே தண்ணீர் வழிந்தோட வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜன.,ல் நடக்கும் தெப்பத் திருவிழாவிற்காக இன்று(டிச.,11) முதல் தண்ணீர் விட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆற்றில் இருந்து மோட்டார் மூலம் பம்பிங் செய்து தெப்பக்குளத்தில் தண்ணீர் விடப்படுகிறது.