பதிவு செய்த நாள்
12
டிச
2019
03:12
திருவொற்றியூர் : திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
மணலியில் உள்ள, சி.பி.சி.எல்., எண்ணெய் நிறுவனத்தின் பாதுகாப்பு பணியில் உள்ள, சி.ஐ.எஸ். எப்., எனும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், 60க்கும் மேற்பட்டோர், திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் வளாகம் மற்றும் கோவில் குளம் சுற்றுப்புறத்தில் உள்ள செடி, கொடிகள் மற்றும் குப்பையை அகற்றும் பணியில், நேற்று முன்தினம் 10ம் தேதி ஈடுபட்டனர். இதில், 1 டன் குப்பை அகற்றப்பட்டது. 15ம் தேதி வரை, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், பள்ளிகள், கோவில்கள், தேவாலயம் உள்ளிட்ட இடங்களில், துாய்மை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.