பதிவு செய்த நாள்
12
டிச
2019
03:12
மாமல்லபுரம் : மாமல்லபுரம் கோவிலில், திருமங்கையாழ்வார் சாற்றுமுறை உற்சவம், நேற்று முன்தினம் (டிசம்., 10ல்) நடந்தது.
திருமங்கையாழ்வார், கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திர நாளில் பிறந்தார். தன் திருமொழி யில், 20 பாசுரங்களில், ஸ்தலசயன பெருமாளை, போற்றி பாடியுள்ளார்.
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் வீற்றுள்ள அவருக்கு, அவரது பிறப்பு நட்சத்திர நாளான நேற்று (டிசம்., 11ல்) மாலை, சாற்றுமுறை உற்சவம் நடந்தது.பெருமாள், தேவியர், நிலமங்கை தாயார், அவருக்கு, சிறப்பு திருமஞ்சன வழிபாடு, திருப்பாவை சாற்றுமுறை நடந்தது.தொடர்ந்து, இரவு, பெருமாள், ஆழ்வார், வீதியுலா சென்றனர். கோவிலை அடைந்ததும், திருவாய்மொழி சாற்றுமுறை நடந்து, பெருமாள், அவருக்கு, பரிவட்ட மரியாதை அளித்தார்.