பதிவு செய்த நாள்
13
டிச
2019
02:12
வெள்ளகோவில்:குப்பியண்ண சுவாமி கோவிலில் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்துக்கு, முகூர்த் தக்கால் நடப்பட்டது. வெள்ளகோவில் அருகே முத்தூர் அத்தனூர் அம்மன், குப்பியண்ண சுவாமி, சின்னமுத்தூர் செல்வ குமாரசாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில், அடுத்தாண்டு, பிப்.,5ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.இதற்காக, யாகசாலைக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில், எம்.எல்.ஏ., தனியரசு, முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், முத்தூர் நகர அ.தி.மு.க., செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் ராமலிங்கம் உட்பட கோவில் குலத்தவர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.