சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு சிறப்பு வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2026 08:01
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
காரைக்குடி அருகே தைப்பூசத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டான் பகுதியில் இருந்து அனைத்து நாட்டார்கள் காவடி ஜன., 24ம் தேதி புறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி தலைமையில் 160 காவடிகளை பக்தர்கள் பாத யாத்திரையாக எடுத்து வந்தனர். நேற்று மருதிப்பட்டி கிராமத்தில் காவடிகளுக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு ரத்தினவேலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து சதுர்வேதமங்கலம் வழியாக சிங்கம்புணரி வந்த காவடிக்கு அப்பகுதியிலும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பழநியில் ஜன., 31 ம் தேதி சுவாமிக்கு நாட்டார் காவடி செலுத்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.