மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா முகூர்த்தக்கால் நடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2026 03:01
பெரியகுளம்: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்.,15ல் துவங்குவதை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திரு விழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
பல்வேறு பகுதிளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.
அம்மன் மலர்அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர். பிப்., 15 முதல் 22 வரை 8 நாட்கள் திருவிழா நடக்கிறது.
மஞ்சளாற்றின் கரையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூலஸ்தானமான குச்சுவீட்டின் கதவு திறக்கப்படுவதில்லை.
மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக அணையாத நெய்விளக்கு எரிகின்றது.
இங்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடைபெறும் சாயரட்சை பூஜையில் சயன உத்தரவு கேட்பது கோயிலின் சிறப்பு அம்சம். தீபாரதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப் படுவதில்லை.
இங்கு நெய் பானையை எறும்புகள் நெருங்குவதில்லை. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இங்குள்ள அம்மனை குலதெய்வமாக வணங்குகின்றனர்.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பரம்பரை அறங்காவலர்கள் கனகராஜ் பாண்டியன், தனராஜ் பாண்டியன், உபயதாரர்கள் செய்திருந்தனர்.